வெளிநாடுகளில் இலங்கை மீன்பிடித்துறைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவசர கலந்துரையாடல்!

Monday, November 27th, 2023

இலங்கையில் இருந்து சர்வதேச கடலுக்கு செல்லும் பலநாள் படகுகள் எல்லை தாண்டிச் செல்வது தொடர்பாகவும் அதனால் வெளிநாடுகளில் இலங்கை மீன்பிடித்துறைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடினார்.

ஏற்கனவே பலநாள் படகுகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவை தொடர்பாக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் இவ்வாறான பிரச்சனைகள் காணப்படுகின்ற படியால் பலநாள் படகு உரிமையாளர்களை அழைத்து இது விடயம் தொடர்பில் ஆராய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு  அமைச்சர் பணிப்புரை வழங்கியிருந்தார்

இதனிடையே

இலங்கையில் கடற்பாசி வளர்ப்புக்கு உகந்த  சூழலும் , கடற்பிரதேசமும் காணப்படுவதால் இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு விரும்புவதாகவும், ஒவ்வொரு திட்டங்கள் ஊடாகவும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வருமானம் பெறக்கூடிய வகையில் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும் இந்திய முதலீட்டாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த பகுதிக்கு விஜயம் செய்து பார்வையிடுவதுடன் அப்பகுதி கடற்றொழில் சங்கங்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி முடிவு செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை

பலநாள் படகுகளுக்கு எரிபொருட்களை குறைவான விலையில் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சிகளின் ஒரு கட்டமாக இலங்கை ஐ ஓ சி நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் அமைச்சர் இன்று கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


பயனற்ற அலுவலகங்களுக்கு மக்கள் பணத்தினை வீண்விரையம் செய்யாதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம...
பேசாலை ரின்மீ்ன் ஆலையை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் ...
வத்தராயன் கடற்றொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு - அனைத்து செலவுகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவான...