வெற்றிக்கு கைகொடுங்கள்: எர்காலத்தை வென்றெடுத்து தருவேன் – புதுக்குடியிருப்பில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Tuesday, October 29th, 2019

யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களை வழிநடத்துவதாக கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தவறுகளே இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பல அவலங்களை எதிர்நோக்க காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டார மக்களுடனான சந்திப்புன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்-

மாக்களின் அவலங்களை நான் நன்கு உணர்ந்தவன். அதன்னால் தான் நாம் எமது மக்களின் எதிர்காலம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி சேவைகளைச் செய்து வறுகின்றோம்.

இப்பகுதி யுத்தத்தின் தாக்கத்தை கடுமையாக எதிர்கொண்ட பகுதியாகும்.
அதுமட்டுமல்லாது இப்பகுதி வாழ் மக்கள் யுத்தத்தின் வழிகளை அதிகம் எதிர்கொண்டவர்கள். இவர்களது வாழ்வு ஒளிமயமானதாக மாற்றப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.

ஆனால் இன்றுவரை ஆட்சி அதிகாரத்தில் பங்காளிகளாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அக்கறைகொள்ளாதுள்ளனர்.

கடந்த நான்கரை வருடங்களில் நாம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் அந்த வாய்ப்பை சிறந்தமுறையிலேயே பயன்படுத்தியிருக்கிறோம்.
பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டும் கொடுத்திருக்கின்றோம்.

நாம் தேர்தல் வெற்றிக்காக மக்களிடம் வாக்குறுதி கொடுப்பதில்லை. நாம் முன்வைக்கும் ஒவ்வொன்றும் மக்கள் நலன் சார்ந்தவையாகவே இருக்கின்றன. எம்மை நம்புங்கள்.
நாம் முன்வைக்கும் வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றுவோம் என்றார்.

Related posts: