வீட்டுத் திட்டங்களில் பயனாளிகளுக்கு இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா

Friday, June 3rd, 2016

மீள்க் குடியேற்றத்திற்கு தயாராக உள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டங்களின்போது பயனாளிகளுக்கு இலகுவான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்குரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இடம்பெயர்ந்த நிலையிலுள்ள மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களிலான வீடுகளை வழங்கும்போது, அம் மக்களை பெரிதும் சிரமங்களுக்கு உட்படுத்தக்கூடிய நடைமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும்.  சில இறுக்கமான நடைமுறைகள் காரணமாக உரிய பயனாளிகள் பலர் தங்களுக்கான வீடுகளைப் பெறுவதில் இழுத்தடிப்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அத்துடன், இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிக் கொண்டிருக்கும் அகதி மக்களுக்கு வீடுகளை வழங்குவதிலும் இழுத்தடிப்பு நிலை சில பகுதிகளில் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. இவ்வாறான நிலைமைகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

இடம் பெயர்ந்த மக்கள் எனும் போது, இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் மக்களும் அதில் உள்ளடங்குகின்றவர்களே என்பதை அவதானத்தில் கொண்டு, இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை வழங்கும்போது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

எனவே, இவ்விடயங்களை அவதானத்தில் கொண்டு அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts:


தமிழ் மக்களின் அரசியல் தெளிவே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் – பருத்தித்துறையில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்க...
அரச தொழில் வாய்ப்புக்களின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் வேண்டும் - அர...
காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர...