“விவசாய நிலத்திற்கு மின்சாரம்” அங்குரார்ப்பண நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Saturday, October 1st, 2016

விவசாய நடவடிக்கைகளுக்கு சலுகை கட்டண அடிப்படையிலான புதிய முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்காக “விவசாய நிலத்திற்கு மின்சாரம்” என்ற புதிய திட்டம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் நீர்வேலியில் பிரத்தியேகமாக ஒழங்கமைக்கப்பட்ட பயிர் செய் நிலத்தில் குறித்த நிகழ்வு இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

நிகழ்வுக்கு மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி அமைச்சர் அஜித் பெரேரா, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வட மாகாண  ஆளுனர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தின் ஊடாக இலங்கை விவசாய துறையில் பாரிய முன்னேற்றத்தை மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் இதனூடாக வடபகுதி மட்டுமல்லாது ஏனைய ககுதி விவசாயிகளும் நன்மையடையவுள்ளதாக தெரிவித்த அமைச்சர்  இந்த நிகழ்வை யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்வதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வில் ஒப்பந்தப் பத்திரங்களை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விவசாயிகளுக்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

.1

3

5

01

7

Related posts:

அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...
அச்சம் கொள்ள வேண்டாம் – சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்பள்ளி ஆசிரியர்களிடம் டக்ளஸ் எம்.பி உறுதி!
இரணைதீவில் கடற்தொழில் மேற்கொள்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் ஆராய்வு...

ஈ.பி.டி.பி. கூறுகின்ற அரசியல் நிலைப்பாட்டையே ஏனைய கட்சிகளும் பின் தொடர்கின்றன - அமைச்சர் டக்ளஸ் தே...
காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் டக்ளஸ...
எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் அமை...