வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டாரக் காரியாலயம் ஒன்று வவுனியாவில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்காக வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள நரசிம்மர் கோவிலடியில் குறித்த பணிமனை இன்று காலை செயலாளர் நாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
முன்பதாக இன்றையதினம் வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளை உள்ளடக்கிய மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் முக்கியஸ்தர்கள் பலருடன் கலந்துரையாடவுள்ளார்.
இந்நிலையில் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினரான பாலசிங்கம் பிரசன்னா அவர்களது அரசியல் செயற்பாடுகளுக்கான அலுவலகம் இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், ஊடகச் செயலர் தோழர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட அமைப்பாளர் திலீபன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|