வழமைக்கு திரும்பியது பாதை போக்குவரத்து ஊர்காவற்துறை – காரை மக்கள் அமைச்சர் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் இடையிலான மிதக்கும் பாதை போக்குவரத்து சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியமையுள்ளமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட வெளிப்படுத்திய உடனடி அக்கறைக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.
இயந்திரத்தின் உதிரப்பாகம் ஒன்று பழுதடைந்தமையினால் குறித்த மிதக்கும் பாதை மூலமான போக்குவரத்து கடந்த வாரம் தடைப்பட்டிருந்தது.
இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்ட பிரதேச மக்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர்கள் ஊடாக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு மேற்கொண்ட தேவையான நடவடிக்ககைகளை தொடர்ந்து பழுது பார்க்கும் நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து சேவை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்; நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறித்த போக்குவரத்து அசௌகரியத்தினை தீர்த்து வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட ஊர்காவத்துறை பிரதேச சபை தலைவர் ஜெயக்காந்தன், காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் றஜனி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே.ஜெகன் ஆகியோருக்கும் பிரதேச மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடற்றொழில் அமைச்சரின் முயற்சியினாhல் ஊர்காவற்துறை காரைநகர் இடையில் 500 மீற்றர் நீளமான பாலம் அமைப்பதற்கு சுமார் 1700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால், மிதக்கும் பாதை ஊடான போக்குரத்து இன்னும் சில வருடங்களினுள் முடிவிற்கு கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|