வட இலங்கை சமாதான நீதிவான் சங்கத்தினர் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

Sunday, June 9th, 2019

வட இலங்கை சமாதான நீதிவான் சங்கம் தமது பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்கு சங்கத்தின் பதிவுகளை மேற்கொண்டுதந்து அதன் எதிர்கால செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருமாறு குறித்த சங்கத்தின் நிர்வாகத்தினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகை தந்திருந்த குறித்த சங்கத்தின் நிர்வாகத்தினர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் குறித்த சங்கத்தை பதிவு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஒரு வருட காலமாக செயற்பாடுகளை ஆரம்பித்து நிர்வாக கட்டமைப்புடன் இயங்கிவரும் குறித்த சங்கமானது இதுவரை பதிவு செய்யாதிருப்பதால் பல சேவைகளை முன்னெடுப்பதில் அசௌகரியங்களை சந்திக்க நேரிடுகின்றது.

அதுமாத்திரமல்லாது எமது இந்த சங்கமானது வடபகுதியில் வறிய மக்களையும் மாணவர்களையும் மையமாகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக கண்பார்வை அற்றவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கல், வறிய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல், மரநடுகை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் இவற்றை நாம் சட்டரீதியாக மேற்கொள்ளும் போது பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடுவதால் எமது சங்கத்தின் பதிவு இன்றியமையாத தொன்றாக உள்ளது எனவே எமது சங்கத்தின் பதிவை விரைவாக பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தருமாறு செயலாளர் நாயகம் டகள்ஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்

குறித்த சங்க நிர்வாகத்தினரது கோரிக்கைகளை கருத்தில் கொண்ட செயலாளர் நாயகம் காலக்கிரமத்தில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


எமது அரசியல் போராட்ட வழிமுறை சரியானது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றத...
இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் – அமைச்சர் டக்ள...
இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள்  முல்லை மாவட்டச் செயலகத்தில்  அமைச்சர்...