வடக்கில் நகரங்களாக வளர்ச்சிபெற்ற பிரதேச சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்த வேண்டும். நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

Untitled-5 copy Friday, September 8th, 2017

யாழ்ப்பாணத்தில் 1989ஆம் ஆண்டுக்கு முன்னர் நகர சபைகளாக( பட்டின சபைகளாக) இருந்த சங்கானை, சுன்னாகம், காங்கேசன்துறை, நெல்லியடி, பண்டதரிப்பு, உரும்பிராய், மானிப்பாய், ஊர்காவற்துறை, ஆகியனவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நகரங்கள் 1989ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்துடன், பட்டன சபைகள் என்ற அந்தஸ்த்தை இழந்து பிரதேச சபைகளாக மாற்றம் பெற்றன.

கடந்த 25 வருட காலப்பகுதியில் இந்த குறிப்பிட்ட பத்து பிரதேசங்களில் சுன்னாகம், சங்கானை, நெல்லியடி, மானிப்பாய், ஆகிய பிரதேசங்கள் பாரிய நகரங்களாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆகவே இந்த நகரங்களின் வளர்ச்சியை கவனத்தில் எடுத்து அச்சபைகளை நகர சபைகளாக தரம் உயர்த்தி அதற்குரிய அந்தஸ்த்தும் கொடுக்கப்பட வேண்டும்.

அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தின் தலை நகராகவும், கல்வி, வர்த்தம், விவசாயம், கைத் தொழில் மையங்கள் போன்ற செயற்பாடுகளின் மையமாகவும் கிளிநொச்சி நகரம் வளர்ச்சி பெற்றிருப்பதால், கிளிநொச்சி பிரதேச சபையை நகர சபையாக தரம் உயர்த்த வேண்டும். நகர சபையாக தரம் உயர்த்தப்படும்போதுதான், அச்சபையின் நிர்வாகத்தையும், முகாமைத்துவத்தையும் சிறப்பாக செய்ய முடியும்.

அதுபோலவே முல்லைத்தீவு மாவட்டத்தின் வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் கவனத்தில் கொண்டு முல்லைத் தீவு பிரதேச சபையையும் நகர சபையாகத் தரம் உயர்த்தி நகரில் வாழும் மக்களுக்கு அச்சபை சிறப்பான சேவையை வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

இதைத் தவிர வட மாகாணத்தில் 4 பிரதேசங்கள் பிரதேச செயலகங்கள் அமையப்பெற்றுள்ளபோதும், பிரதேச சபைக் கட்டமைப்பு உருவாக்கப்படாமல் இருக்கின்றன. அவையாவன, யாழ்ப்பாணம் வடமாராட்சியில், மருதங்கேணி, கிளிநொச்சியில் கண்டாவளை, முல்லைத்தீவில் ஒட்டிசுட்டான், மன்னாரில் மடு என்பவையாகும்.

இந்த 4 பிரதேசங்களுக்கும் தனியான பிரதேச சபைக் கட்டமைப்பு இன்மையால் அடிமட்ட கிராமிய அபிவிருத்தியைக் கூட முன்னெடுப்பது அப்பிரதேசத்தில் கடினமான காரியமாக இருக்கின்றது. பிரதேச சபைக் கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் இப்பிரதேசங்கள் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றன. எனவே இந்த 4 பிரதேசங்களுக்கும் பிரதேச சபைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்தக் குறைபாடுகள்; உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாக் கப்படுவதற்கு முன்னார் நிவர்த்திக்கப்பட வேண்டும். பாதிப்புகக்ளுக்கும், வளர்ச்சிப் பின்னடைவுகளுக்கும் உள்ளாகியிருக்கும் இப்பிரதேச மக்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாமல், உள்ளுராட்சித் தேர்தல்கள் நடைபெறுமாக இருந்தால், அது குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பயனற்றதாகவே இருக்கும்.


அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது - நாடாளுமன்ற...
இணைய சேவையை கல்வித்துறை சார்ந்தோர் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  - ட...
மக்களின் உரிமைகளுக்காய் நாம் என்றும் குரல்கொடுப்போம் -துன்னாலையில் டக்ளஸ் தேவானந்தா!
தற்துணிவுகளின் அடிப்படையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து நாம் வெற்றி கண்டுள்ளோம் - செயலாளர் ...
தேசிய நல்லிணக்கம் என்பது எமது மக்கள் மத்தியில் சாத்தியமற்ற விடயமாகவே இருக்கிறது -  நாடாளு மன்றில் டக...
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!