யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Saturday, December 18th, 2021

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்ற முதலீட்டாளர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ் மாவட்டத்தினை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்கள் பலர் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள நிலையில், முதலீட்டாளர்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில்,  சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது

குறித்த சந்திப்பு இன்று காலை அமைச்சரின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

தபாலகங்களில் பதில் கடமையாளர்களாக கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டு காலப் பகுதியில் உள்வாங்கப்பட்டவர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது நியமனங்களை நிரந்தரமாக்குவதன் மூலம் கௌரவமான எதிர்காலத்தினை ஏற்படுத்தி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டபோது, பதில் தபால் ஊழியர்களாக உள்வாங்கப்பட்ட போதிலும், தற்போது ஏனைய தொழில்களில் ஈடுபடுத்துவதாகவும் அவற்றை தாம் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

முன்பதாக

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட அமரர் வே. சிவஞானசோதி ஞாபகார்த்த  வகுப்பறை கட்டிடத் தொகுதியையும் இன்று காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்துவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

.

000

Related posts:

சம்பூரில் காணி, நிலங்களை விடுவித்தோம் என மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை மக்கள் மீள்குடியேற என்ன செ...
ஆட்சி அதிகாரம் எமது கரங்க ளுக்குக் கிடைக்கப்பெற்றால் பாகுபாடுகளுக்கு இடமளிக்கப்போவதில்லை - மட்டு மாந...
சபரிமலை யாத்திரையை புனிதயாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா