யாழ்ப்பாணத்தில் 39 ஆலங்களின் புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதியுதவி வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுமார் 39 ஆலங்களுக்கான புனருத்தாபன நிதியுதவி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்து ஆலயங்களை புனரமைப்பதற்கு நிதியுதவியளிக்குமாறு கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடியதன் பயனாக இந்து காலாச்சார திணைக்களத்தின் ஊடாக குறித்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முதற்கட்டமாக வடக்கு கிழக்கை சேர்ந்த சுமார் 120 இற்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனையவற்றிற்கான நிதியுதவிகள் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
smart smart smart smart smart
Related posts:
யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த வலுவான செயற்பாடுகள் அவசியம்: உள்ளூராட்சி சபைகள் அதிக அக்கறையுடன் ...
வடமராட்சியில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலால் பாரம்பரிய மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன - மன்ற...
கட்சியினால் மேற்கொள்ப்படுகின்ற வேலைத் திட்டங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுவதில்லை - அமைச...
|
|