மேற்சபையில் சிறுபான்மை யினருக்கு 50 – 50 விகிதம் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, September 26th, 2017

தற்போது நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் திருத்த யாப்பில் முன்மொழியப்பட்டுள்ள மேற்சபையில் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவம் 50 இற்கு 50 என்றவாறு அமையப்பெற வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட வட்டார செயலாளர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அதிகாரப்பகிர்வு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையும் கேள்விக்குறியாவதுடன் உருவாக்கப்படவுள்ள மேற்சபையின் நோக்கமும் அர்த்தமற்றதாக அமைந்துவிடும்.     இதன் காரணமாகவே சிறுபான்மையின மக்களுக்கு பயனதரவல்லதாக 50 இக்கு 50 என்ற விகிதாசாரத்தை நாம் வலியுறுத்திவருகிறோம் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின்  கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன். கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்,யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் ஆகியோர்  உடனிருந்தார்.

22068683_1540415042664244_1833101972_o

22050578_1540414949330920_2031150279_o

Related posts:

எதிர்காலங்களை வளப்படுத்தும் எமது செயற்பாடுகளுக்கு மக்கள் முழுமையான அரசியல் பலத்தைத்தரவேண்டும் - அம்ப...
பேருந்து நிலைய அசௌகரியங்களுக்கு தீர்வுபெற்றுத் தரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வவு...
சேதன பசளைகள பயன்பாட்டில் சில இடையூகள் இருந்தாலும் சில காலத்தில் அதுவே சிறந்ததாக அமையும் - அமைச்சர் ட...