மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 5th, 2020

மன்னார் மாவட்டத்தில் காணப்படும் கடற்றொழில் சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுத்தரப்பட்டு கடற்றொழிலை நம்பி வாழும் மக்களது வாழ்வாதாரத்துடன் அவர்களது பொருளாதாரமும் சிறந்தமுறையில் அமைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட சென்றுள்ள அமைச்சர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்க சேன்று கடற்றொழில் சார் அமைப்புகளின் பிரச்சினைகள் மற்றும் மக்களது தெவைப்பாடகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இதன்போது மக்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்தபின் கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் –

இப் பகுதியில் தமிழ் மக்கள் குறிப்பாக கடற்றொழிலை நம்பி வாழும் மக்கள் அதிகளவான பாகுபாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்திருந்ததை அவர்கள் கூறும் கருத்தக்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது.

ஆனாலும் நான் தேசிய அமைச்சுப் பொறுப்பை வகிப்பதனால் அனைத்து மக்களையும் ஒருசேரவே பார்க்கின்றேன். எமது செயற்பாடுகளில் பாகுபாடுகளோ அன்றி பழிவாங்கல்களோ இருக்கப் போவதில்லை.

மக்கள் எதிர்கொள்ளும் வறுமை நிலைமை இல்லாது போகவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக எமது அமைச்சினூடாக மேற்கொள்ளக் கூடிய அனைத்து திட்டங்களையும் முன்னெடுக்க நான் தயாராக இருப்பதுடன் இப்பகுதியில் சிறு தொழில் முயற்சிகளை மேற்கொள்ள பல திட்டங்களை உருவாக்கவுள்ளேன். இதற்க முதலீடுகளை மேற்கொள்ள உங்களையும் அழைக்கின்றேன்.

அந்தவகையில் தலைமன்னார், கீளியன் குடியிருப்பு, பேசாலை, தாழ்வுப்பாடு, எருக்கலம் பிட்டி போன்ற பகுதிகளில் கடற்றொழிலை நம்பி வாழும் மக்களுக்கு மட்டுமல்லாது ஏனைய மக்களும் பலன்களைப் பெறக்கூடிய வகையில் நன்னீர் உயிரின வளர்ப்பு கடல் நீர் உயிரின வளர்ப்பு போன்றவற்றுடன் கடலுணவு உற்பத்தி போன்றவற்றை உரவாக்கவும் அவற்றை ஏற்றுமதி செய்து புதிய தொழில்துறைகளை இனங்கண்டு இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கான எதுநிலைகளை இனங்கண்டு தருமாறும் கோரிக்கைவிடுத்தார்.

Related posts:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது சத்தியப்பிரமாண வைபவம் ஆரம்பம்!
முற்போக்கு சிந்தனையோடு அனைவரையும் அரவணைத்து செயற்பட்டவர் அமரர் ரேணுகா ஹேரத் - டக்ளஸ எம்.பி. தெரிவிப்...
வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி க்கும் எந்தத் ...