மன்னார் கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!

Tuesday, November 26th, 2019

மன்னார் பள்ளிமுனை மற்றும் தலைமன்னார் பிரதேசங்களைச் சேர்ந்த கடற்றொழில் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் தாம் எதிர்கொள்ளும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இன்றையதினம் மாளியாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது நீண்டகாலமாக தாம்  தமது தொழில் நடவடிக்கைகளில் தடைகள், பிரச்சனைகள் அதற்கான தீர்வகள் தொடர்பில் அமைச்சரிடம் கோரிக்கைககளாக முன்வைத்தனர்.

கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் சந்துரு அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் குறித்த மீன்பிடி சங்கங்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: