மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கியதாகவே எமது பயணங்கள் தொடரும் – வவுனியாவில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Sunday, June 17th, 2018

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு நிரந்தரதீர்வு காணப்படும் அதேவேளை சமநேரத்தில் அரசியல் பிரச்சினை தொடர்பிலும் உரிய தீர்வுகள் காணப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா வெளிக்குளம் பகுதியில் நடைபெற்ற ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்கும் அரசியல் உரிமைகளுக்குமான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதிலே நாம் மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டிருக்கின்றோம். செயற்பட்டுக்கொண்டும் இருக்கின்றோம். கடந்த காலங்களில் நாம் இரண்டு விடயங்களையும் கவனத்தில் கொண்டது மட்டுமன்றி அதற்காக எமது பூரணமான அர்ப்பணிப்பான பங்களிப்பையும் வழங்கியிருக்கின்றோம்.

குறிப்பாக இரண்டு விடயங்களையும் முன்கொண்டு சென்று அதில் கணிசமான வெற்றியையும் பெற்றிருக்கின்றோம்.

அந்தவகையில் எமது மக்களின் அன்றாடப் பிரச்சினை அபிவிருத்தி அரசியலுரிமைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எட்டப்படும் வகையில் எமது எதிர்கால நடவடிக்கைகள் தொடரும் என்பதையும் ஆணித்தனமாக கூற விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

மாற்றுத்திறனாளிகளுக்கான விஷேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
இளம் சந்ததியினர் தடம் மாறிச் செல்ல இருந்த தமிழ் தலைமைகளே காரணம் – யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தே...
ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – இறந்தவர்களை நினைவு...

ஜூலை கலவரம் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக் கலவரம் எனக் கொள்ள முடியாது - நாடாளுமன்றில்...
கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற...
தமிழ் மற்றும் முஸ்லீம் அமைப்புக்களின் தடை பட்டியல் மீளாய்வு செய்யப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் வலி...