புலம்பெயர் தேசங்களிலும் எமது நாட்டின் கலை கலாசார விழுமியங்கள் பேணப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016

புலம் பெயர்ந்து எமது மக்கள் வாழ்கின்ற நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்களின் ஊடாக எமது மக்களின் கலை, கலாசார விழுமியங்களைப் பேணக்கூடியதான வகையில் ஏற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம் என நான் இந்தச் சபையின் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலங்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

தேசிய நல்லிணக்கத்தை அந்த மக்களிடத்தேயும் கட்டியெழுப்பக் கூடியதான பல்வேறு நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும்,புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகளை வளவாளர்களாகவும், முதலீட்டாளர்களாகவும் பயன்படுத்தி, எமது நாட்டில் பல முதலீடுகளில் ஈடுபடக் கூடிய வகையிலான நம்பிக்கையை வலுப்படுத்துகின்ற ஏற்பாடுகளும் தேவை என்பதையும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அத்துடன், எமது புலம்பெயர்ந்த உறவுகள் எமது நாட்டுக்கு அடிக்கடி வந்து போகக்கூடிய வகையிலான எற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாக, எமது நாட்டுக்கான பொருளாதாரத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள இயலும் என்பதுடன், புலம்பெயர் உறவுகளுக்கும் எமது கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடனான பிணைப்புகள் வலுப்பெறும் என்ற விடயத்தையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Cabinet-to-be-Sworn-in-Today

Related posts:

காணிப் பிணக்குகளை நியாயமான வகையில் தீர்ப்பதற்கு அரச காணிக் கொள்கை ஒன்று அவசியம் - மன்றில் டக்ளஸ் M.P...
தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை யாழ்ப்பணத்தில் நடைபெறும் நிரந்தர சமூக வலுவூட்டலை விஸ்தரிக்கும் கலந்துரையாடல்!