புதிய தேர்தல் முறையில் குறைபாடுகள் உள்ளன — நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 19th, 2018

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இலகுபடுத்தும் வகையில் எனக் கூறப்பட்டு, கொண்டு வரப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் பிரதிபலன்களை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

வேட்பாளருக்கு அதிக செலவுகளை ஏற்படுத்துகின்ற விருப்பு வாக்கு முறைமையினை ஒழிக்கப்பட்டு, இன்று வேட்பாளர்களுக்கு செலவினைக் குறைத்து, அரசுக்கு பாரிய செலவினை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்த உறுப்பினர்களைக் கொண்டதாகவே இந்த உள்ளூராட்சி மன்றங்கள் உருவாகியிருக்கின்றன. அதே நேரம், பணமுள்ளவர்கள் வட்டாரங்களில் வெற்றி பெறக்கூடிய நிலைமையினையும் இது எற்படுத்தியிருக்கின்றது.

60 வீதம் வட்டார முறைமையிலும் 40 வீதம் விகிகதாசார முறைமையிலும் எனக் கூறப்பட்டாலும் இன்று நடைமுறையில் 100 வீதம் விகிதாசார முறையிலேயே இந்த தேர்தல் முறைமை செயற்படுத்தப்பட்டு வருகின்றதாகவே உணர முடிகின்றது.

அந்த வகையில், வட்டாரங்களில் வெற்றி பெற்ற கட்சிகளின் வெற்றியானது முடங்கிப் போய், தோல்விகண்ட கட்சிகளின் பலமான எதிர்க்கட்சிகள் உருவாக்கம் பெற்றுள்ள நிலையில், வெற்றியாளர்களால் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புகள் தொடர்பிலான தீர்மானங்கள் போதிய பெரும்பான்மை இன்றிய நிலையில் பலம்வாய்ந்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சிக்கலான நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

மாகாண சபைகளைப் பொறுத்தவரையில் நிதி விதிகள் தொடர்பிலான முறைமைகள் பின்பற்றப்படாத நிலை பொதுவாகவே அவதானிப்புப் பெறுகின்ற நிலையில், இது பல்வேறு ஊழல், மோசடிகளுக்கு வழியேற்படுத்தும் நிலையாகவே தென்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க கணக்குகள் தொடர்பிலான கணக்குகள் பற்றிய குழுவினது அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

z_fea800 copy

Related posts:


போதைப் பொருள் கடத்தல்காரர்களின் விபரங்கள் காணாமல் போனதா? காணாமல் ஆக்கப்பட்டதா - நாடாளுமன்றில் டக்ளஸ்...
மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றோம் – திருமலையில் அ...
30 ஆம் திகதிய இலங்கை - இந்திய துறைசார் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக முன்னேற்பாட்டி...