புதிய ஆண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Tuesday, January 4th, 2022

கடற்றொழில் அமைச்சின் ஊடாக புதிய ஆண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் உட்பட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சின் வேலைத் திட்டங்களை மக்கள் பலனடையும் வகையில் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திய கடற்றொழில் அமைச்சர், தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

000

Related posts:

எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் - கிளிநொச்ச...
அரசு “பிள்ளையார் பிடித்தாலும் விளைவு குரங்காகத்தான் இருக்கின்றது” – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரம்: விரைவில் இருதரப்பு பேச்சுவார்த்தை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...