பருத்தித்துறை நரசிம்மர் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியை டக்ளஸ் தேவானந்தா மக்களிடம் கையளிப்பு!

Sunday, January 1st, 2017

பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத்தெரு நரசிம்மர் கோவிலடி பகுதி மக்களின் குடிநீர் தேவைகளுக்காக புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்து பொதுமக்களது பாவனைக்கு கையளித்தார்.

DSCF0712

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த பகுதி மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த குடிநீர் தாங்கி அமைக்கப்பட்டிருந்தது.

DSCF0714

நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குடிநீர் தாங்கியை நாடா வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்து மக்களிடம் கையளித்துள்ளார்

DSCF0716

இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் கட்சியின் வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்)  கட்சியின்  பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் குமார்,   குறித்தபகுதி பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

DSCF0724

DSCF0719

Related posts:

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பேன் - அல்லைப்பிட்டிஒளிவிழாவில் அமைச்சர்...
ஆசிரியர் நியமனங்களை அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைகளை கணி...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை - டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ...
கடற்றொழில் சார் அதிகாரிகளுடன் தொழில்சார் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையா...