பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா – பந்துல குணவர்த்தன விஜயம்!

Friday, March 18th, 2022

கற்பக தருவான பனை சார் உற்பத்திகளை மேலும் மெருகேற்றி சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தல் மற்றும், சதோச விற்பனை நிலையங்கள் மூலம் உள்நாட்டு சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் போன்றவை தொடர்பாக ஆராயும் நோக்கில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளடங்கிய பிரமுகர்கள் பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதனிடையே ஊர்காவற்துறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கடற்றொழில் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பிரதிநிதிகள்,  ஊர்காவற்துறை சந்தை கட்டிடத் தொகுதியைப் பார்வையிட்டதுடன்  தற்போதைய சூழலில் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக வர்த்தகர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: