நுண்கடன்கள் எமது மக்களை தற்கொலை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, December 9th, 2017

யுத்தத்தின் பின்னரான எமது மக்களின் பொருளாதார பலவீனத்தை இலக்காகக் கொண்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குள் நுழைந்துள்ள ஏராளமான நிதி நிறுவனங்கள், நுண்கடன் என்ற போர்வையில் எமது மக்களை தற்கொலைகளை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந் தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் ஏற்பட்டிருந்த திடீர் நுகர்வுத் தேவைகளின் காரணமாக வடக்கில் ஏற்பட்டிருந்த உடனடி வர்த்தகப் பொருளாதாரமானது, அதிகமான பொருட் களஞ்சியங்களை உருவாக்கியதன் காரணமாக, வடக்கின் வர்த்தகத்துறையானது அதிகளவு படுகடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரமிட் போன்ற வர்த்தக நடவடிக்கைகள் இன்னமும் எமது பகுதிகளில் எமது மக்களை சுரண்டி வருகின்றன.

இத்தகைய பல்வேறு வகையிலான பாதிப்புகளுக்கு உட்பட்டுவருகின்ற எமது மக்களைக் குறிவைத்தே அரசும் தனது ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதுதான் மிகவும் வேதனையாக இருக்கின்றது.

எமது பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமான பனை வள உற்பத்திகளையும் கேள்விக்கு உட்படுத்தும் வகையில், பனங் கள் இறக்குவதற்குத தடை என ஒரு வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

இத்தகைய ஏற்பாடுகள் தெரிந்து கொண்டுதான் மேற்கொள் ளப்படுகின்றனவா? அல்லது, தெரியாத்தனமாக மேற்கொள்ளப்படு கின்றனவா? என்பதே எமக்குப் புரியாமல் இருக்கின்றது – என்றார்.

Related posts:

வரலாற்றுச் சின்னமான நெடுந்தீவுக் குதிரைகளை  காப்பாற்ற வேண்டும் -  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுற...
பருத்தியடைப்பு காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்...
பனை சார் தொழிலும் எமது மக்களுக்கு தூரமாக்கப்பட்ட ஒரு துறையாகிப் போவது மிகுந்த வேதனையைளிக்கின்றது - ச...

இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் – அமைச்சர் டக்ள...
நல்லாட்சி அரசு அரசியலுக்காக எங்களை பாவித்துவிட்டு ஏமாற்றிவிட்டது - டெங்கு ஒளிப்பு உத்தியோகத்தர்கள் ...
'கோமாதா உற்சவம் - 2022' சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்த...