நாயாறு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு அமைச்சர் டக்ளஸ் முயற்சியில் சுமூகத் தீர்வு!

Friday, March 19th, 2021

முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் காணப்பட்ட கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது.

அந்தவகையில், நாயாறு பிரதேசத்தில் பூர்வீகமாகக் தொழிலில் ஈடுபட்ட சிலாபம் கறுக்குப்பனை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 150 படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரதிநிதிகளும் கருக்குப்பனை மீனவர் பிரதிநிதிகளும் இணைந்த குழு ஒன்றினை அமைத்து, அனுமதிக்கப்படாத படகுகள் மற்றும் சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது எனவும் பொது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாயாறுப் பிரதேசத்தில் பூர்வீகமாக தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 25 படகுகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் ஒப்புதலுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது சுமார் 200 இற்கும் மேற்பட்ட படகுகளுக்கு கடற்றொழில் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அனுமதி பெறப்படாத படகுகள் மற்றும் சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதற்கும் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் விவசாயத் துறையில் ஈடுபடும் மக்களுக்கும் மானிய விலையில் மண்ணெண...
யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் ட...
அக்கராயனில் கரும்புச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்த...