தொழில்நுட்ப, பொருளாதார அடிப்படையில் இந்தியா வழங்கும் உதவிகள் வரவேற்கத்தக்கவை! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Saturday, March 26th, 2016

எமது நாட்டு மாணவர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அடிப்படையில் இந்திய அரசு வழங்கிவரும் புலமைப்பரிசில்கள் வேறு எந்தவொரு நாடும் வழங்காத பாரிய உதவியாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், உலகின் வேறெந்தவொரு நாடும் இலங்கைக்கு வழங்காதளவில் இந்திய அரசானது தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அடிப்படையிலான புலமைப் பரிசில்களை வழங்கி வருகிறது. தொழில்நுட்ப அறிவுடன் ஆங்கில மொழிப் பயிற்சியையும் வழங்கும் வகையில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலமாக இந்தியாவில் அந்த வாய்ப்பினைப் பெறுகின்ற எமது மாணாக்கர் சிறந்த பயனைப் பெறக்கூடியதாகவுள்ளது.

இந்திய அரசின் இந்த உதவியானது மிகவும் பாராட்டத்தக்கதொரு பாரிய உதவியாகும் எனத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இது தொடர்பில் இந்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி
கூட்டமைப்பு நடத்திக்கொண்டிருப்பது வேடிக்கை அரசியல் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
வடக்கில் அதிகரித்துவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ்...