தீர்வுகள் எட்டப்படாத நிலைமைக்கு காரணம் மக்கள் சரியானனவர்களை தெரிவு செய்யாமையே காரணம் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, November 4th, 2017

தமிழர்கள் தமது உரிமைகளுக்காக ஜனநாயக வழிமுறையிலும்  ஆயுத வழிமுறையிலும் போராடி தீர்வுகள் எட்டப்படாத நிலையில்  மீண்டும் ஜனநாயக வழிமுறையில் போராட வேண்டிய சூழ்நிலையே காணப்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றையதினம் (04.11.2017) விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா ஒட்டுசுட்டான் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மெலும் அவர் தெரிவிக்கையில் –

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழர் வரலாற்றில் ஆரம்பகாலங்களில் தீர்வுக்காக ஜனநாயக வழிமுறையில் போராடி உரிய தீர்வுகள் எட்டப்படாத நிலையில் ஆயுத வழிமுறையிலான  போராட்டத்தை தெரிவு செய்து அதன் வழி போராடி தீர்வுக்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்த போதிலும் அவை தோல்வி கண்டிருந்த நிலையில் மீளவும் ஜனநாயக வழிமுறையில் தீர்வுகளை காண்பதற்காக போராடியே வருகின்றோம். இதுவே தமிழர்களின் இன்றைய நிலையாகிவிட்டது.

எமது மக்களின் இன்றைய நிலைக்கு மக்கள் தெரிவு செய்த தவறான தமிழ் தலைமைகளே காரணம் என்பது மட்டுமன்றி அவர்களது தவறான வழிநடத்தல்களே காரணமாக அமைந்து விட்டது என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எமது மக்களிடம் நடைமுறை சாத்தியமாகாத பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வடக்கு மாகாண சபையை கைப்பற்றியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டடமப்பினர் மாகாண சபையைக் கைப்பற்றி 03 வருடங்களைக் கடந்த போதிலும் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வடக்கு மாகாண சபை தேர்தல் வெற்றி பெற்றதன் பின்னர் தமிழர் ஆட்சி மலர்ந்தது என்று கூறியவர்கள் இன்று என்னசெய்வதென்று தெரியாது அங்கலாய்க்கின்ற நிலைமையே காணமுடிகின்றது என தெரிவித்தார்.

அந்தவகையிலே அவர்களைத் தெரிவு செய்த மக்கள் இன்று பாவப்பட்ட நிலைமையில் இருக்கின்றார்கள் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ்(கிருபன்) ,யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:


திருமலை மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றவுள்ள பிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினர் செந்தில் த...
கடற்றொழில் அமைச்சின் 2023 ஆண்டிற்கான செயற்பாடுகள் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்ப...