திருமலைக்கு அமைச்சர் டக்ளஸ் வியஜம் – கோணேஸ்வரம் ஆலயத்தின் பரிபாலன சபையினருடன் விசேட கலந்துரையாடல்!

Tuesday, October 11th, 2022

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் பரிபாலன சபையினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் வகையில்,  ஆலயத்தின் சுற்றுச் சூழலில் இடம்பெறும் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், அதுதொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருமலைக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டுள்ளார்.

இதன்போது கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மதங்களின் விழுமியங்களும் நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போதைய அரசாங்கம் இருகின்ற நிலையில்,  எந்தவொரு மதத்தினதும் நம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
– 11.10.2022

Related posts:

நாடெங்கும் பாகுபாடின்றி பகிரப்படுகின்ற திட்டங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தே...
கட்சி அரசியலுக்கு அப்பால் இவர்கள் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் - அனுதாபப் பிரேரணை செய்திக் ...
மாணவர்களது புலன்கள் தவறான வழியில் திசைதிரும்பாது அவர்களை வளப்படுத்துவது விளையாட்டுத்துறை ஆசிரியர்களத...

எமது பிரச்சினைகளை சர்வதேச அளவீடுகளைக்கொண்டு அளக்க முடியாது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
கிடைக்கப்பெறும் வழிமுறைகளை தமிழ் மக்களின் நிரந்தர விடியலுக்கான களமாக அமைக்கவேண்டும் – செயலாளர் நாயகம...
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு தமிழகம் கோரிக்கை - நிராகரித்துள்ளதா...