தமிழினம் தோற்றுப் போகவும் இல்லை தோற்கப் போவதும் இல்லை: முல்லையில் அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்!

கடந்த காலங்களில் தமிழ் தலைமைகளின் தவறான வழிமுறைகள் தோல்வியடைந்துள்ளதே தவிர, தமிழ் மக்கள் என்றைக்கும் தோற்றுப் போகவும் இல்லை தோற்கப் போவதுமில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
ஒதியமலை பிரதேசத்தில் மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச மக்களினால் எடுத்துக் கூறப்பட்டது. குறிபபாக இராணுவத்தினரும் வனவளத் திணைக்களத்தினரும் தங்களது பூர்வீக காணிகளை பயன்படுத்துவதற்கு தடையாக இருப்பதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள், வனவளத் திணைக்களத்தின் செயற்பாடுகளினால் எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் குறித்த விவகாரத்தினை தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெரித்துள்ளதாகவும், எனவே குறத்த பிரச்சினைகளுக்கு தேர்தல் முடிவடைந்து சில மாதங்களில் நேரடியாக வந்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும் உறுதியளித்தார்.
அத்துடன் கடந்த காலங்களில் புலிகளின் தலைமைக்கும் தனக்கும் இடையில் காணப்பட்ட அரசியல் முரண்பாடு தொர்பிலும் அவற்றின் பின்னணி தொடர்பிலும் முல்லைத்தீவு மக்களுக்கு தெளிவுபடுத்திய அமைச்சர் அவர்கள் சமகால அரசியல் யதாரத்த நிலைகளையும் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|