ஜனாதிபதி ரணிலின் மீதான எதிர்பார்ப்புகள் வெறும் நம்பிக்கை அல்ல – கடந்தகால செயற்பாடுகளின் அனுபவம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, May 24th, 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான எதிர்பார்ப்பு அதீத நம்பிக்கை அல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் அவருடைய செயற்பாடுகளிலும் எண்ணத்திலும் இருக்கின்ற தெளிவான வேலைத் திட்டம் மற்றும் சிந்தனை ஆகியவற்றை நேரடியாக அவதானித்த அனுபவத்தின் அடிப்படையிலேயே அவருக்கு மேலும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவருடன் சேர்ந்து நாமும் பயணிக்க வேண்டும் என்ற கருத்தை தான் முன்வைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதன்போது அவர் மேதலும் கூறுகையில் –

நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கவேண்டும் என்பதுடன் அதுவே மக்கள் ஒவ்வொருவரதும் நிலைப்பாடாகவும் மாறவேண்டும். இதை நான் பல தடவைகள் பொதுவெளியிலும் கூறிவந்திருகின்றறேன்.

அதேநேரம், தென்னிலங்கையில் நாட்டை சீர்தூக்கிச் செல்லக்கூடிய வகையில் வேறு தலைவர்கள் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை.

நாடு வங்குறோத்தான நிலையில் எதற்றெடுத்தாலும் வரிசையில் மக்கள் காத்திருந்துதான் பெறவேண்டும் என்ற துன்பமான சூழ்நிலையில் இருந்தவேளை யாரும் நாட்டை பெறுப்பெடுக்க முன்வராத நிலையில் அந்த விசப்பரீட்சையில் இறங்கி நாட்டை மீட்கும் நடவடிக்கையில் தணிச்சலாக ஈடுபட்டவர் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

அதாவது “பிறேக் டவுண்” ஆன வாகனம் போன்று செயலற்றுக் கிடந்த இருந்த நாட்டை மிகக் குறுகிய காலத்துக்குள் முடியுமானவரை சீர் செய்து ஓடச் செய்துள்ளார் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இதனால் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பாரானால் நாடு முழுமையாக வளர்ச்சிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதுமட்டுமல்லாது எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினைகள் முதல் அபிவிருத்தி உள்ளடங்கலான அரசியல் தீர்வு வரையிலான மூன்று ‘அ’ க்களுக்கும்  முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை முன்வைக்க கூடிய ஒருவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணப்படுகிறார்.

கடந்த சில வருடங்களாக பல்வேறு விடயங்களில் அவை நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கு நாம் கட்டி வளர்த்துள்ள தேசிய நல்லிணக்கமும் கணிசமான பங்களிப்பை செய்திருக்கிறது.

எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தல் என்பது எமது மக்களையும் வெற்றியின் பங்களார்களாக அடையாளப்படுத்தும் வகையில் தமிழ் மக்களது செயற்பாடகளும் அமைவது அவசியமாகும்..

இதேவேளை கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறான நிலைபாட்டில் இருந்தார் என்பது முக்கியமல்ல. ஆனால் தமிழ் மக்களின் அரசில் பிரச்சினைக்கான தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான விருப்பம் தற்போது அவரிடம் அதிகம் காணப்படுகிறது. அதில் எனக்கு நேரடியாக அவதானித்த அனுபவத்தின் அடிப்படையிலேயே அதிக நம்பிக்கை இருக்கின்றது

அது மட்டுமல்லாது தற்போதைய காலச்சூழலில் நாட்டை பொருளாதார நிதியில் முன்னேற்றக் கூடிய தலைமைத்துவ ஆளுமையும் அவரிடம் உள்ளது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

முல்லை மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரதே...
பலாலி வடக்கிற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – பூர்வீக மக்களுக்கே முன்னுரிமை வேண்டும் என அன்ரனிபுரம் மக்க...

பயனாளிகளுக்கு நியாய விலையில் மணல் கிடைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்...
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக உணர்வு ரீதியிலான யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றதா? – நாடாளுமன்றில் ...
அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு - காலம் தாழ்த்தாது செயலில் இறங்க...