செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூநகரி வலைப்பாடு பிரதேச மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வு!

Saturday, February 23rd, 2019

கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த மாவட்டத்தின் பூநகரி வலைப்பாடு பிரதேசத்தில் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்றையதினம் (23) நடைபெற்ற இந்த சந்திப்பின்போது குறித்த பிரதேச மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

குறிப்பாக சுயதொழில் வாய்ப்பு, வீடமைப்புவசதி, சுகாதாரம், வாழ்வாதார தேவைப்பாடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் போன்றவற்றில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மக்கள் மற்றும் பிரதேச பொறுப்பாளர்கள் எடுத்துக் கூறியிருந்தனர்.

மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் காலக்கிரமத்தில் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே குறித்த இச்சந்திப்பின்போது தற்கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனாந்தா அவர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தினார். இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு நாடாளுமன்றத்தில் ட...
நல்லொழுக்க  சந்ததிக்காய் அனைவரும் ஒன்றிணைவோம்-சித்தியெய்திய மாணவர்களு க்கான வாழ்த்துச் செய்தியில் டக...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அரசியல் சூழ்நிலை குறித்து ஆராயும் விஷேட பொதுக் கூட்டம் !

இறுதித் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் 13ஆவது திருச்சட்டமே - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு...
மக்கள் மீதான எமது அக்கறையே நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமைந்தது – டக்ளஸ் எம்...
எமக்கு கிடைத்த சபைகளை வினைத்திறன் மிக்க சபைகளாக வழிநடத்தி செல்வோம் - ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்...