சுழியோடிகளின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதாக – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி!

அகில இலங்கை சுழியோடிகள் சங்க உறுப்பினர்களுக்கும் கடற்றொழில் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானத்தாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (2020.02.06) இடம்பெற்றது.
அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது சுழியோடிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவூம் அதனால் தமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் ஏராளமான சாவல்களை எதிர்கொள்வதாகவூம் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
சுமார் 200க்கு மேற்பட்ட சுழியோடிகள் கலந்துகொண்ட இச்சந்திப்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக தமது தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவூம் அதனால் அவ் வர்த்தமானி அறிவித்தலில்; காணப்படும் சில விடையங்களை அகற்றுவதற்கு நடடிவக்கையெடுக்கு மாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
சுழியோடிகளின் பிரச்சினைகளை ஆதூரத்தடன் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ சுழியோடிகள் நாட்டிற்கு மிகவூம் இன்றியமையாதவர்கள் எனவூம் அவர்களின் பிரச்சினைகளை தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வினை பெற்றுக் கொடுப்பதாகவூம் உறுதியளித்தார்.
இவ் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கஇ கடற்றொழில் நீரியல் வள திணைக்களைத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே ஆகியோர் கலந்து கொண்டிருந்தானர்.
Related posts:
|
|