சுழிபுரம் மேற்கு அலைமகள் முன்பள்ளி கட்டடத்தை பாடசாலை சமூகத்திடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, December 8th, 2019

சுழிபுரம் மேற்கு அலைமகள் முன்பள்ளிக்கான் நிரந்தர கட்டடத்தை கடல் தொழில் மற்றும் நீரியல் மூலவள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இன்றயதினம் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்து உரையாற்றிய அமைச்சர் கூறுகையில் –

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில் நாம் அவர்களது எதிர்காலம் குறித்தே அக்கறை செலுத்திவந்திருக்கின்றோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் என்னை நம்புங்கள் நான் செய்வேன் செய்விப்பேன் என்று கூறியிருந்தேன்.

ஆனால் மக்கள் நான் கூறியதை நம்பவில்லை. கோட்டபயவை நம்பி சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து என்னை தோற்கடித்துள்ளனர் என்றே கருதுகின்றேன்.

அந்தவகையில் அதிலிருந்து மீளாதிருக்கும் நிலையில் அமைச்சுப் பொறுப்பையும் ஏற்பதில்லை என்றே இருந்தேன்.

ஆனால் பலதரப்பட்டவர்களிடமிருந்து என்னை நோக்கி கொடுக்கப்பட்ட அளுத்தங்கள் மற்று ஆலோசனைகளுக்கு அமைவாக நான் இந்த அரசில் அமைச்சுப் பொறுப்பேற்றுள்ளேன்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களும் என்மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இந்த பொறுப்பை என்னிடம் வழங்கியுள்ளனர்.

நான் அவர்களது நம்பிக்கைக்கும் எமது மக்களின் அபிலாசைகளுக்கும் ஏற்ப இந்த அமைச்சைக் கொண்டு முடியுமான வரை சேவைகளை செய்ய முழுமையாக முயறசி்ப்பேன்.

1948 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முன்பள்ளி பாடசாலையானது ஒரு நிரந்தர கட்டடம் இல்லாத நிலையில் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் இயங்கி வந்தது.
இது தொடர்பில் இப்பகுதி மக்கள் பலதரப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்க்திருந்தும் அது கைகூடாத நிலையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கான நிதியாக நாற்பத்து ஏழு இலட்சம் வழங்கியிருந்தது.

குறித்த நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டு கட்டுமாணப் பணிகள் பூர்த்தியான நிலையில் அதன் திறப்பு விழா இன்றையதினம் நடைபெற்று மக்களிடம் இந்த கட்டடம் வழங்கப்பட்டுள்ளது

இன்னும் பல கோரிக்கைகள் உங்களிடம் இருக்கின்றன. அவற்றையும் நிறைவு செய்து கொடுக்க நாம் முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார்.

Related posts:


வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
கல்லூண்டாய் குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்...
பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு இடையுறாக இருக்கும் தடைகளை அகற்றும் வகையில் முடிவுகள் அமைய வேண்டும் ...