சுகாதாரத் தொண்டர்களுக்களுக்கு நியாயமான முறையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, November 5th, 2021

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்களுக்கு நியாயமான முறையில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலத்தின் முன்பாக திரண்ட சுகாதார தொண்டர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

இன்றையதினம் முற்பகல் அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகம் முன்பாக ஒன்றுகூடிய சுகாதார தொண்டர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நீண்ட நாள்களாக நிரந்தர நியமனம் இன்றிக் கடமையாற்றி வருகின்ற சுகாதார தொண்டர்ளுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்துள்ளார் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியாயமான முறையில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ...
நீர்வேளாண்மை உற்பத்திகளை அதிகரிக்க பொருத்தமான இடங்களை ஆய்வு செய்து அடையாளப்படுத்துமாறு துறைசார் அதிக...
அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் த...

நெடுந்தீவில் நவீன வசதிகொண்ட நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரி...
இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் ...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர் கலந்துர...