சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் பௌதீகவள பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி நேரில் சென்று ஆராய்வு!

Thursday, February 14th, 2019

யா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் காணப்படும் பௌதீக வள பிரச்சினைகளால் பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளின் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த பௌதீகவளப் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு தருமாறு பாடசாலையின் அதிபர் பேரின்பநாதன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

பாடசாலை சமூகத்தினரது அழைப்பின் பெயரில் இன்றையதினம்(14) பாடசாலைக்கு நேரில் சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பாடசாலையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இதன்போது பாடசாலையின் அதிபர் தமது பாடசாலை கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது பல இடர்பாடுகளை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பாக ஆய்வுகூட சாதனங்கள் பற்றாக்குறை, ஆவணங்களை பாதுகாக்கும் அலுமாரி பற்றாக்குறை, வகுப்பறை தளபாட பற்றாக்குறை போன்றவற்றுடன் விளையாட்டு மைதானம் புனரமைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.

பாடசாலை அதிபரின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாணவர்களது நலன்களை கருத்திற் கொண்டு குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவில் பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Related posts: