சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட நல நிதி கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கிவைப்பு!

Tuesday, December 19th, 2023

சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கடற்றொழில் அமைச்சினால் விசேட நல நிதி கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த ஆகியோரின் பிரசன்னத்துடன் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவும் தொடர்ச்சியாக சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழிவில் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உயரதிகாரிகள், கடற்றொழிலாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது0

000

Related posts:

கஞ்சாக்காரர்களை காப்பாற்றியவர்கள் தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
தொடரும் மழையால் எள் செய்கை பாதிப்பு - இழப்பீடு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் குடாநாட்டு விவசா...
தனிமைப்படுத்தப்பட்டோருக்கான உணவுப்பொதி விநியோகம் சீராக நடைபெற அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

நுண்கடன் முறைமை முற்றாக தடைசெய்யப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
மக்கள் நலன்சார் திட்டங்கள் அர்த்தமுள்ளவகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிட...
சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்...