தனிமைப்படுத்தப்பட்டோருக்கான உணவுப்பொதி விநியோகம் சீராக நடைபெற அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, August 28th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப்பொதி வழங்கலை உரிய காலப்பகுதிக்குள் வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

சில இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய நேரத்தில் உணவுப்பொதிகள் வழங்கப்படவில்லை என்றும், சில சமயங்களில் தனிமைப்படுத்தல் காலம் முடிந்தபின்னரே உணவுப்பொதி அவர்களுக்குக் கிடைப்பதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே அமைச்சர் டக்ளஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக உரிய கவனம் செலுத்துமாறு தமது மேலதிக இணைப்பாளர் .றுஷாங்கனை அவர் பணித்ததையடுத்து, மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் தொடர்புகொண்டு பேசி உரிய நேரத்துக்கு உணவுப்பொதிகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

திடீரென கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தமை, தொற்றாளர் தொடர்பான விபரங்கள் கிடைப்பதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் உரிய நிதி கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களால் உணவுப்பொதி விநியோகத்தில் சில தடங்களல்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்த மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக தரப்புக்கள், எனினும், இவற்றை உடனடியாகச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனர்.

மேலும், உணவுப்பொதி விநியோகம் செய்யும் பொறுப்பை வகிக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களையும் தொடர்புகொண்டு பேசிய ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன், தாமதங்களுக்கான காரணங்கள் குறித்துக் கேட்டறிந்ததுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

இதனடிப்படையில் இன்று சனிக்கிழமைமுதல் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான உணவுப்பொதி வழங்கலை உரிய முறையில் எந்தவித தடங்கலும் இன்றி மேற்கொள்ப்பட்டுள்ளதாகவும், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் பலநோக்குக் கூட்டுறவுச்சங்க பொது முகாமையாளர்கள், ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளரிடம் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன் உணவுபொதி கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் உடனடியாக அதனைத் தமக்கு அறியத்தருமாறும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஈ.பி.டி.பியின் பெயரை அவதூறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஊடகப்பிரிவு அறிவிப்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி: இறால் அறுடைக்கான அனுமதிக்கான அனுமதிகளை வழங்கியது ...
கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...

போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசம...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவின் க...
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகாண சாத்தியமான வழிமுறைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ...