சட்டவிரோத கடலட்டை தொழிலிலை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை!

Wednesday, July 21st, 2021

குருநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதச் கடலட்டை செயற்பாடுகளை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவறுத்தப்பட்டுள்ளது.

நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் அடையாளப்படுத்தபட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இழுவைவலைப் படகுகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்படடுள்ள நிலையில், அதனை மீறுகின்ற வகையிலும் கடற்றொழில் சங்க ஒழுங்கு விதிகளை மீறும் வகையிலும் சுமார் 39 இழுவை வலைப்படகுகள் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருவதாக குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளினால் இன்று(21.07.2021) கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழுவை வலைப் படகுகளைப் பயன்படுத்தி கடலட்டை தொழில் ஈடுபடுகின்றவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட பிரதானி ஜெ. சுதாகரனுக்கு கடற்றொழில் அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: