‘குளவிக் கொட்டு” பாதிப்பையும் தேசிய அனர்த்தமாக அறிவிக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

உழைப்பிற்கு ஏற்ற ஊதியமின்மை, தொடர்ச்சியான வேலை நாட்கள் இன்மை, அடிப்படை வசதிகள் இன்மை, அடிப்படை உரிமைகள் இன்மை, குளவி, தேனீ, சிறுத்தை, வஷ ஜந்துக்கள் மத்தியில் தொழில் செய்ய நேரிடுகின்றமை போன்ற பல்வேறு துன்ப துயரங்களுக்கு ஆட்பட்ட மக்களாகவே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் குளவிக் கொட்டு என்பது மலையகப் பகுதிகளில் பரவலாகவும், அடிக்கடியும் இடம்பெற்று வருகின்ற அனர்த்தமாக உள்ளது.
இதன் காரணமாக பலர் தொடர் அவதிகளுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில், குளவிக் கொட்டையும் எமது நாட்டின் அனர்த்தங்களில் ஒன்றாக அறிவிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுப்பது அவசியம் என ஈழ மக்கள் ஜனநதயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்;.
இலங்கை தேயிலைச் சபை (திருத்தச்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|