குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்றுவோம் என்றவர்கள் இப்போது அரசியல் யாப்பிற்காக ஜனாதிபதியுடன் கை கோர்க்க தயாராக இருப்பதாக புதுக் கதை விடுகின்றனர் – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, June 21st, 2020

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஏற்றுவோம் என்று வீராப்பு பேசி வாக்குகளை சூறையாடியவர்கள் இப்போது புதிய அரசியல் யாப்பிற்காக ஜனாதிபதியுடன் கை கோர்க்க தயாராக இருப்பதாக புதுக் கதை கூற ஆரம்பித்துள்ளார்கள் என்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுபவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிகாசம் செய்துள்ளார்.

வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்று பூந்தோட்டம், பெரியார் குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பி்ல் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts:

நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை இதயசுத்தியுடன் செயற்படுத்த முன்வாருங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக உணர்வு ரீதியிலான யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றதா? – நாடாளுமன்றில் ...
ஐயாத்துரை ஐயாவின் கனவுகள் நிறைவேறும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மாவை கலட்டி மக்களுக்கு உறுதி!