குற்றவாளியை நியாயப்படுத்தும் முதலமைச்சர் விக்கியின் வியாக்கியானம்!

18052631_1384076841631399_772223981_n Thursday, April 20th, 2017

“சிறுவர் பாலியல் குற்றம்,கொலை,மோசடிமற்றும் நம்பிக்கைத் துரோகம் போன்ற குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமானந்தாவை நீங்கள் குருவாக வழிபட்டுவருவது சரியா?”என்று வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த அவர்,“குற்றவாளியாகக் காணப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட ஒருவரை 2000ஆம் ஆண்டுகளாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா” என்று பதிலளித்திருப்பது உலகமெங்கும் வாழும் கிறிஸ்துவமக்களின் மனதை புண்படுத்தியுள்ளது.

யேசுநாதரின் மதபோதனைகளை விரும்பாதவர்கள் அவர் மீது வீண் பழி சுமத்தினார்கள். யேசுநாதரின் போதனையை எதிர்த்தவர்களே அவரை தமது எதிரி என்றும், தமது மதக்கோட்பாடுகளுக்கு அடங்க மறுத்த குற்றவாளி என்றும் கூறி அவரை தாக்கினார்களேதவிர, கொலைகாரனான பிரேமானந்தாவை நியாயப்படுத்துவதற்கு முன்னுதாரணமாக இருக்கும் அளவுக்கு குற்றச் சாட்டுக்களுக்கு ஆளானவராக யேசுநாதர் ஒருபோதும் இருக்கவில்லை. ஆகையால்தான் யேசுநாதர் இன்றும் பல நூறுகோடி மக்களினால் நம்பிக்கையைப் பெற்றவராக வணங்கப்படுகின்றார்.

பைபிளை படித்ததாகவும், கிறிஸ்துவத்தைப் படித்ததாகவும் அதற்காக பரிசுகள் பெற்றதாகவும் கூறும் முதலமைச்சர் விக்கிணேஸ்வரன், தான் படித்த பைபிளிலும், கிறிஸ்துவத்திலும் எந்த இடத்தில் குற்றவாளி பிரேமானந்தாவுக்கு நிகரான குற்றவாளியாக யேசுநாதர் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார் என்பதை எந்த அத்தியாயத்தில் படித்தார் என்பதை விளக்கவேண்டும்.

முன்னாள் நீதியரசராக இருந்தவரான முதலமைச்சரின் கருத்தானது, இவர் எவ்வாறு ஒருகுற்றவாளியையும், ஒரு நிரபராதியையும் அடையாளம் கண்டிருப்பார் என்பதை சிந்திக்கவைக்கின்றது. யேசுநாதரை அவரது மத போதனைகளை ஏற்காதவர்களே அவர் மீதுகுற்றம் சுமத்தியதற்கும், முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் யேசுநாதரான பிரேமானந்தாவை, இந்திய மற்றும் இலங்கை நீதிமன்றங்கள் குற்றவாளியாகப் பார்த்ததும் எந்தவிதத்தில் சரிசமானமாக இருக்கமுடியும் என்ற கேள்வியை முதலமைச்சர் விக்கிணேஸ்வரனை நோக்கி கிறிஸ்தவ மக்கள் முன் வைத்தபோது அதற்கு பதிலளித்த முதலமைச்சர்,

தனது கருத்து கிறிஸ்தவ மக்களின் மனங்களை புண்படுத்தியிருந்தால் அதற்காகநான் மனவருத்தம் அடைகின்றேன். என்று கூறும் அவர், தான் கூறியதை நியாயப்படுத்தியுமுள்ளார்.

யேசுநாதர் குற்றமற்ற புனிதராக இருந்ததால்தான்; அவர் மனிதகுலத்திற்கு போதித்தது நியாயம் என்பதை நிரூபிப்பதற்காக மீண்டும் உயிர்த்து எழுந்தார். ஆனால் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் யேசுநாதரான குற்றவாளி பிரேமானந்தாவால் மீண்டும் உயிர்த்து எழுந்து வந்து நிரூபிக்கமுடியவில்லை என்பதைமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் சிந்தித்தறியவேண்டும்.

யேசுநாதரைப் பற்றியும், கிறிஸ்துவின் வரலாறுபற்றியும் அறியாமல் முதலமைச்சர் கூறியிருக்கின்றார். என்ற வகையில் அவர் அறியாமல் செய்த பாவத்திற்காக கிறிஸ்துவின் மக்கள் மன்னிப்பார்களா?

18052631_1384076841631399_772223981_n


நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? - கல்வி...
நவீன வசதிகளுடன் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் - டக்ளஸ் தேவானந்தா...
ஹர்த்தாலுக்கு ஈ.பி.டி.பி ஆதரவு!
தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத...
படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும்!
30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…