குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 13th, 2023

கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக  எமது மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களிலும், இன்றைய சந்திப்பிலும் மக்கள் பிரதிநிதிகளினாலும் அதிகாரிகளினாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் –  ஆலோசனைகள் மற்றும் வாதப் பிரதிவாதங்களின்  அடிப்படையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை தெளிவான முறையில் அடையாளப்படுத்தி, அவை நடைமுறைப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதன பின்னர்,  ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

கெளதாரிமுனை காற்றாலை திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான விடேச கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தகது–

Related posts:

இந்து மற்றும் முஸ்லிம் மக்களது மத ரீதியிலான  நாட்களிலும் மதுபான சாலைகளை  மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...
நேர்முகத் தேர்வுக்கு உள்வாங்கப்படாத ஏனைய தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்பிலும் உரிய நடவ...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் வவுனியா மாவட்ட மாநாடு ஆரம்பம்!