குண்டு வெடிப்புக்கள் கண்டனத்திற்குரியவை : மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புனர்வுடனும் இருக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவிப்பு!

இலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது மனித குலத்திற்கு எதிரானதும் கண்டிக்கத்தக்கதுமான பயங்கரவாத தாக்குதல்களாகும். இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
இன்று (21.04.2019) நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக செயலாளர் நாயகம் விடுத்துள்ள அந்தச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் காயமடைந்துள்ள மக்கள் விரைவில் குணமடைவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விஷேட ஏற்பாடுகளின் அடிப்படையில் செய்வதுடன் காயமடைந்த மக்களுக்கு தேவையான குருதிக் கொடை வழங்குவதற்கு நாடு தழுவிய ரீதியில் மக்கள் முன்வந்து இன பாரபட்சங்களுக்கு இடமளிக்காமல் வழங்கியிருப்பது போற்றத்தக்க மனித நேய உதவியாகும்.
தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான முழுமையான விசாரணைகள் எவ்விதமான பாரபட்சத்திற்கு இடமளிக்காத வகையில் முன்னெடுக்கப்பட்டு நாட்டில் அமைதி நிலைநாட்டப்படுவதுடன் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சமும் பதற்றமும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
பொதுமக்கள் தமது பாதுகாப்பையும்ரூபவ் நாட்டின் அசாதாரண சூழலையும் கவனத்தில் கொண்டு நிதானமாகவும் விழிப்புனர்வுடனும் செயற்பட வேண்டும் என்றும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|