குடாரப்பு தரையிறக்கத்தின் போது கால்களை இழந்த முன்னாள் கடற்புலி போராளிக்கு அமைச்சர் டக்ளஸின் முயற்சியினால் புதிய வாழ்கை சூழல் உருவாக்கம்!

Friday, February 17th, 2023

குடாரப்பு தரையிறக்கத்தின் போது கால்களை இழந்த முன்னாள் கடற்புலி போராளி ஒருவருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் புதிய வாழ்கை சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

சுமார் 18 ஆண்டுகள் கடற்புலிகள் அமைப்பில் செயற்பட்டிருந்த காளிமுத்து செல்வராசா என்பவர் காலை இழந்த நிலையில், புதுமாத்தளன் பகுதியில் படகு இயந்திரம் திருத்தும் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றார்.

அடிப்படை வசதிகளற்ற நிலையில் குறித்த தொழிலில் ஈடுபட்டு வருகின்ற காளிமுத்து, அண்மையில் அந்தப் பகுதிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தனது வாழ்வாதார நிலையையும் எதிர்பார்ப்புக்களையும் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கவனத்தில் எடுத்த கடற்றொழில் அமைச்சர், நன்கொடையாளர் ஒருவரின் ஒத்துழைப்புடன் தொழில்நுட்ப வசதிகளுடனான புதிய படகு இயந்திரம் திருத்தும் நிலையத்தினை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று முல்லைத்தீவில் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் புலிப் போராளியான காளிமுத்து செல்வராசாவை சந்தித்துடன், சம்பிரதாயபூர்வமாக இன்று திறந்து வைக்கப்படவுள்ள படகு இயந்திரம் திருத்தும் நிலையத்தின் இறுதிக் கட்ட வேலைகளையும் அவதானித்தார். – 17.02.2023

000

Related posts:

காணிகள் விடுவிப்பு - எழுத்தளவில் - பேச்சளவில் மாத்திரம் இருப்பதில் பயனில்லை! எமது மக்கள் குடியேற ஏ...
யுத்தத்தின் பின் வடக்கில் பொருளாதாரப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருதல் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. சுட்டி...
சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து...