கீரிமலை வலித்தூண்டல்றோ.க.த.க.பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்குபற்றி சிறப்பிப்பு!

Thursday, January 30th, 2020

கீரிமலை வலித்தூண்டல் றோ.க.த.க.பாடசாலையின் 2020 ஆம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
குறித்த நிகழ்வு இன்றையதினம் (30) நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் –

இப்பிரதேச மாணவர்கள் கல்வியுடன் மட்டுமல்லாது ஏனைய பாடவிதான செயற்பாடுகளிலும் ஊக்குவிக்கப்பட் வேண்டும். அதற்காக பாடசாலை நிர்வாகம் மட்டுமல்லாது பெற்றோரும் குழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்பது அவசியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலைக்கு பௌதீக வளங்கள் கணனிக்கூடம் கட்டட வளம் பொது மண்டபம் போன்றவை அவசியமாக வேண்டும் என அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தவகையில் அதிபரின் அக்கறைக்கும் அவர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும் இப்பிரதேச மக்களது ஒத்க்துழைப்புடன் நான் என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய தயாராக இருக்கின்றேன் என தெரிவித்த அமைச்சர்

தமிழ் மக்கள் இதுவரை காலமும் தெரிவு செய்த அரசியல் பிரதிநிதிகளின் அக்கறையின்மையே இன்றும் நாம் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணமுடியாதிருக்கின்றது.

இந்த நிலை வரவுள்ள தேர்தலுடன் மாற்றம் பெறும் என நான் நம்புகின்றேன்.

அதுமட்டுமல்லாது இப்பிரதேச மக்களது வாழ்வாதரங்களும் சிறப்பாக அமைய பல திட்டங்களை நான் முன்னெடுக்கவுள்ளேன்.

பெற்றோர்கள் வரவுள்ள சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்துங்கள் அதனூடாக உங்கள் பிள்ளைகளது எதிர்காலம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் வாழ்வியலில் மாற்றத்தை உருவாக்கி காட்டுவேன் என்றார்.
இதன்போது வெற்றி ப்ந்ற்ற மாணவர்களுக்கும் பரிசில்களை வழங்கிவைத்தார்.

Related posts:

நியாயங்கள் எம்பக்கமே இருக்கின்றன என்பதை வரலாறு சுட்டிக்காட்டி நிற்கின்றது - டக்ளஸ் எம்.பி !
ஈ.பி.டி.பி சொல்லிவந்த மாற்றுக் கருத்துத்தான் இன்று பலதரப்பட்டவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்...
சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன...

அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்க...
மக்கள் சேவைகளுக்காக உயிர் தியாகங்களை செய்தவர்கள் நாங்கள் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்...
கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை பாதிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...