கிளி – முல்லை மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியைகள் விடயம் அவர்களின் விருப்பின் பேரில் கையாளப்பட வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Friday, March 18th, 2016

கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தால் நடாத்தப்பட்டுவரும் முன்பள்ளிகளில் ஆசிரியைகளாகக் கடமையாற்றி வருபவர்களை மாகாண சபையுடன் இணைக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், மேற்படி ஆசிரியைகள் இந்த நடவடிக்கைளை விரும்பாத வகையில் கருத்து தெரிவித்து வருவதாகவம் அறிய முடிகின்றது.

தங்களை வடக்கு மகாண சபையின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் பேசப்பட்டு வருவதானது, தங்களுக்குக் கவலையளிப்பதாகவும், எனவே, தங்களது எதிர்காலம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே தங்களுக்கு மாகாண சபை மூலமாக 4,000 ரூபா கொடுப்பணவு வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அத் தொகை பல மடங்கு அதிகமாகக் கிடைப்பதாகவும் மேற்படி முன்பள்ளி ஆசிரியைகள் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. மகாண சபையின் கீழ் சென்றால் இந்த வருமானத்தை தாங்கள் இழக்க நேரிடும் என்ற அச்சம் இவர்களிடம் காணப்படுவதையே இது காட்டுகிறது.

எனவே, மேற்படி ஆசிரியைகளது வாழ்வாதாரத்தை அழித்துவிடாமல், அவர்களது விருப்பின் பேரில் இந்த விடயத்தைக் கையாளுவதே நல்லதென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்துக்கது

Related posts: