கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதிக்கு  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Friday, January 12th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்றையதினம் (12)  விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குறித்த தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் தனித்து போட்டியிடுகின்றது.

அந்த வகையில்  கிழக்கு மாகாணத்திற்கு கடந்தவாரம் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்  செல்லும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொள்ளவுள்ளதுடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயவுள்ளார்.

அத்துடன் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் வெற்றி வாய்ப்பை மக்கள் உறுதி செய்யும் பட்சத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டுமாணம் உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமை பிரச்சினைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் "நல்லூர் இராசதானி" தேர்தல் அலுவலகம் டக்ளஸ் தேவானந்தாவால் திறந...
படிப்பினைகள் பாடமாகாவிட்டால் நல்லிணக்கம் சாதியம் ஆகாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்கா...
ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு திருமலையில்: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆர...