கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் – டக்ளஸ் எம்.பி.!

Wednesday, January 31st, 2018

மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளோ சிந்தனைகளோ இல்லாதவர்கள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வடக்கு மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு சுழிபுரம் வீராவத்தை பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மக்களின் நலன்களுக்காக தாம் பல்வேறு வேலைத்திட்டங்களையும் பணிகளையும் முன்னெடுப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே ஆட்சி புரிந்துவருகின்றனர்.

இதேபோன்றுதான் நாடாளுமன்ற தேர்தலிலும் 16 ஆசனங்களைப் பெற்ற அவர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தை மட்டுமன்றி எதிர்க்கட்சித் தலைமைப் பதவியையும் பெற்றெடுத்துக்கொண்ட இவர்களால் இதுவரையில் மக்கள் நலன் சார்ந்த எதனையும் செய்யமுடியவில்லை.

வடக்கு மாகாணசபையூடாக செய்யப்படக்கூடியதான பல்வேறு வேலைத்திட்டங்கள் கூட இன்று செய்யப்படாமல் உள்ளமையானது மக்கள் மத்தியில் அவர்கள் மீது பலத்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் கிடைக்கப்பெறுகின்ற வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் எமது மக்களுக்காக நாங்கள் செயற்படுத்தி சாதித்துக்காட்டியுள்ளோம்.

இந்தப் பகுதியிலும் பல்வேறு தேவைப்பாடுகள் குறித்து மக்கள் எமது கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் அவற்றை நாம் நிச்சயம் முன்கொண்டு செல்வதற்கு தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் எமது கரங்களை பலப்படுத்துவார்களேயானால் அது காலக்கிரமத்தில் நடந்தேறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:


ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவை ஆதரிப்பது இதற்காகத்தான் – கூறுகிறார் டக்ளஸ் எம்.பி.!
யாழ்ப்பாணத்திலும் கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்...
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களான ரோஹித அபயகுணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்த...