காலஞ்சென்ற இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருக்கு நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. அஞ்சலிமரியாதை!

Friday, August 9th, 2019

அண்மையில் காலஞ்சென்ற இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சிறந்த பெண் அரசியல் ஆளுமையுமான அமரர் சுஸ்மா சுவராஜ் அவர்களுக்கு எமது மக்கள் சார்பில் எனது இறுதி அஞ்சலியினை இந்தச் சபையிலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த ஆட்சிக் காலத்தின்போது, நான் அமைச்சராக இருந்த நிலையில் அன்னார் இந்திய எதிர்க்கட்சித் தலைவியாக யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

எமது மக்களுக்கான அரசியல் உரிமை தொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வாக நாம் தொடர்ந்து முன்வைத்து வருகின்ற 13வது அரசியல் யாப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதிலிருந்து அத் தீர்வை ஆரம்பித்து, முன்னோக்கி நகர்வதென்ற நடைமுறை சாத்தியமான தீர்வினை அவரும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

இலங்கையின் மீதும், இலங்கை மக்கள் மீதும் மிகுந்த அக்கறையைக் கொண்டு செயற்பட்டிருந்த அன்னாரது பிரிவு ஈடு செய்ய முடியாததாகும்.

அவரது பிரிவால் துன்புறுகின்ற இந்திய அரசுடனும், அன்னாரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவருடனும் எமது மக்கள் சார்பில் நானும் எனது துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த பராமரிப்புகள் தற்போது காணாமற்போய்விட...
தேசிய நல்லிணக்கம் என்பது எமது மக்கள் மத்தியில் சாத்தியமற்ற விடயமாகவே இருக்கிறது -  நாடாளு மன்றில் டக...
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ச...
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நிலையான வருமானமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - டக்ள...
ஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது – நாடாளுமன்றில் டக்ளஸ்...