காணாமல் போன தனது மகனுக்கு பரிகாரம் பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னாள் போராளியின் தாயார் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Saturday, April 3rd, 2021

ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்த நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் காணமால்போன தனது மகனை தான் தொடர்ந்தும் தேடிவருவதாக தெரிவித்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் முன்னாள் போராளி ஒருவரின் தாயார் அமைச்சர் டக்ளஸிடம் அதற்கான பரிகாரத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போதே குறித்த மூதாட்டி தனது மகன் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்த நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் காணமால்போனதாகவும் தன்னுடைய மகனை தாம் தொடர்ந்தும் இன்றுவரை தேடிவருகின்தாகவும் சுட்டிக்காட்டிய மூதாட்டி அதற்கான பரிகாரத்தை பெற்றுத்தருமாறும் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

மூதாட்டியின் பரிதவிப்பை நன்குணர்ந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயம் தொடர்பில் தான் அவதானம் செலுத்துவதுடன் அவர்களின் குடும்ப நிலையை கருத்திற்கொண்டு காலக்கிரமத்தில் அதற்கான பரிகாரத்தை பெற்றுத்தருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: