களப்பு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டநிதியை ஏன் உரிய முறையில்; பயன்படுத்த வில்லை நாரா அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் கேள்வி!

Saturday, June 8th, 2024

நாடெங்குமுள்ள களப்புகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உரிய முறையில் பயன்படுத்தாமை தொடர்பாக தேசிய  நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகத்தின் (நாரா-NARA) அதிகாரிகளிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்..

2024 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதிவரைக்குமான நாராவின் நிறுவனத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பான கலந்துரையாடல் (07.06.2024) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்..

குறிப்பாக வடக்கு – கிழக்கி மாகாணங்களிலுள்ள நந்திக் கடல், சாலை, மட்டக்களப்பு வாவி நாயாறு, நாசிக்குடா களப்புளின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி நிதி முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பாகவும் அவற்றின் முன்னேற்றம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதன்போது நாரா அதிகாரிகள் களப்பு அகழ்தல், பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி செலவழிக்கப்பட்ட விதம் தொடர்பாக விளக்கமளித்தனர். இருப்பினும் சில முரண்பாடுகள் இருப்பதாகவும் களப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்பதவில்லை எனும் முறைப்பாடுகள் இருப்பதாகவும் அமைச்சர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அதற்குரிய விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர் பிறிதொரு தினத்தில் இவ்விடயம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படுமென கூறினார்.

இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி சோமரத்ன, இராஜாங்க அமைச்சின் செலாளர் திருமதி கோகுல, கடற்றொழில் திணைக்களத்தின பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, நாரா பணிப்பாளர் நாயகம் கலாநிதி அருளானந்தன், உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: