கல்வி, சுகாதாரம், காலச்சா ரங்களை பாதுகாத்து வளர்த்தெ டுப்பதில் ஒவ்வொ ருவரும் அதிக அக்கறை செலுத்தவேண்டும்- டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 3rd, 2017

கிராமங்களிலுள்ள பொது அமைப்புகள் தாம் வாழும் கிராமத்தின் வளர்ச்சிக்கான பணிகளில் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற திருநெல்வேலி மகாத்மா ஜீ சனசமூக நிலைய மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவ்ர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள பொது அமைப்புகளும் தமது கிராமங்களின் மேம்பாட்டை வலுப்படுத்தி வளர்த்ததெடுக்கு பாரிய பொறுப்புக்களை உடையன என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

குறிப்பாக கல்வி சுகாதாரம் கலை காலச்சார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து வளர்த்தெடுப்பதிலும் மிகுந்த அக்கறை காட்டவேண்டும். பருவாகால மழை தொடங்கியுள்ள இன்றைய நிலையில் எமது சமூகத்திற்கு பேராபத்தை ஏற்படத்திவருகின்ற டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் சாத்தியங்கள் எதிர்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றிலிருந்து எமது மக்களை பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள பொது அமைப்புகள் குறித்த உயிர்கொல்லி நோய்களிலிருந்து தமது கிராமங்களை பாதுகாக்கும் வகையில் சிரமதானம் போன்ற நற்காரியங்களில் ஈடுபடவேண்டும். அதுமாத்திரமன்றி ஆன்மீகம் சார்ந்த விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதனூடாக தான் சார்ந்து வாழும் சமூகத்தின் நற்பழக்கவழக்கங்களை பேணுவதனூடாக சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரையும் நற்பிரைஜைகளாக்க முடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா இங்கு சுட்டிக்காட்டினார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

DSC_0011

 

Related posts:


அரசியல் தீர்வானது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும் - சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் டக்ளஸ்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ச...
கடற்றொழில் மற்றும் நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள்...