கல்வியை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லுங்கள் : உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக என்றும் நாம் இருப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 2nd, 2018

கல்வியை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லுங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு என்றும் உறுதுணையாகவும் ஒத்தாசையாகவும் இருந்து உங்கள் வாழ்வை வழம்படுத்துவதற்காக உழைப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அச்சுவேலி  அஷம்பிளி ஜீவவார்த்தை ஆலயம் நடத்திய ஒளிவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலம் தெரிவிக்கையில் –

நாளைய தலைவர்களாக உருவாகும் இன்றைய சிறுவர்களை சிறந்தமுறையில் உருவாக்கிக்கொள்வதற்கான பங்களிப்பை சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் சிறந்தமுறையில் முன்னெடுக்கவேண்டும்.

கடந்தகால தமிழ் அரசியல் தலைவர்கள் தமது சுயனலன்களுக்காக எமது இளைஞர்களை பயன்படுத்திக்கொண்டதால் எமது இனம் பல அவலங்களையும் துயரங்களையும் சுமக்கவேண்டிய நிலை உருவானது.

ஆனால் இன்று போலித் தேசியவாதிகளின் பொய்முகங்களை மக்கள் உணர்ந்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளதுடன் மக்கள் மத்தியில் ஒரு மாறுதல் நிலையும் உருவாகியுள்ளது.

இந்த மாற்றம் எமக்கானதாக கிடைக்கப்பெறும் பட்சத்தில் கடந்தகாலங்களில் எமக்கிருந்த குறைந்தளவான அரசியல் அதிகாரங்களூடாக சாதித்துக்காட்டியவற்றை விட பன்மடங்கு சேவைகளை வருங்காலத்தில் பெற்றுக்கொடுத்து எமது மக்களின் வாழ்வியலில் சிறந்த ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கத் தயாராக இருக்கின்றோம் என்றார்.

காங்கேசன் துறை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்த இந்த நிகழ்வில்  குறித்த அமைப்பின் வறிய சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 50 ஆயிரம் ரூபா அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


புனர்வாழ்வுபெற்ற போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு சலுகை அடிப்படையிலான வங்கிக்கடன் - டக்ளஸ் தேவான...
இனங்களுக்கிடையில் முரண் பாடுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகள் தேசிய நல்லிண க்கத்தை சீர்குலைக்கும் - நாட...
தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையில் காணப்படும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்!
சலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலி...
வடக்கு -கிழக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்தது.!