கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Monday, September 21st, 2020

கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துiராயாடி பொருத்தமான தீர்வுகள் பெற்றுத் தரப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வார விடுமுறை தினமான நேற்று(20.09.2020) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியபோதே குறித்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட ஏற்றுமதியாளர்கள், கடற்றொழில் சார் உற்பத்திகள் தொடர்பான ஏற்றுமதி நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், சில முறைகேடுகளை களைவதற்கு தீர்க்கமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் நாட்டில் சுமார் 80 பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் காணப்படுகின்ற நிலையில் கடற்றொழில் திணைக்களத்தினால் ஏற்றுமதி செயற்பாடுகள் தொடர்பில் வினைத்திறனான முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

கடல்சார் பொருட்கள் சிலவற்றின் ஏற்றுமதி செலவு அதிகரித்துள்ளமையால் சர்வதேச சந்தையில் இலங்கை மீன்களுக்கான கேள்வியை தக்க வைக்க ஏதுவாக அவற்றுக்கான வற் வரிகள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் முழுமையான கவனத்தை செலுத்தி குறித்த துறைகளில் தன்னிறைவு அடைவதுடன் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் என்பதில் தற்போதைய அரசாங்கம் தீர்க்கமாக செயற்பட்டு வருகின்ற நிலையில், ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தீர்த்து வைக்கப்படும் எனத் தெரிவித்ததுடன், ஜனாதிபதி மற்றும் ஆலோசகர் பஷpல் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடி அவை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts:


உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவோம்...
மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே எனது நோக்கம் - நியாயமான கோரிக்கைகளை நிறைவேறுவதற்கும் நடவடிக்க...
கிடைத்திருக்கும் அதிகாரங்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பு...